தனக்காக வாதாடிய வழக்கறிஞரை கொன்று எரித்த நபர் கைது! பகீர் பின்னணி
குமரி மாவட்டம் திருப்பதிசாரம் அருகே ஒரு வழக்கு தொடர்பாக தன் வழக்கறிஞர் தனக்கு ஆதரவாக வழக்கு நடத்துவதாக கூறி கொண்டு தன் எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக செயல்பட்டு டபுள் கேம் விளையாடி நம்பிகை தூரோகம் செய்ததாக கூறி தனது வழக்கறிஞரை கொலை செய்த கட்சிகாரரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் தன்னுடைய ஒரு வழக்கு தொடர்பாக தக்கலை சாரல்விளை பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சுபி (50) என்பவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாடி தனக்கு வெற்றி பெற வைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு ஒப்பு கொண்ட வழக்கறிஞர் வழக்கையும் நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே வழக்கின் போக்கு இசக்கி முத்துக்கு சாதகமாக செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அதிருப்தி அடைந்த இசக்கிமுத்து, தனது வழக்கறிஞரான கிறிஸ்டோபர் சுபியிடம் பலமுறை கேட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் வழக்கறிஞர் சரியான பதிலை கூறாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனை அடுத்து சந்தேகம் அடைந்த இசக்கிமுத்து தன் வழக்கறிஞர் நடத்தை குறித்து ரகசியமாக விசாரணை செய்துள்ளார். இதில் தனது வழக்கறிஞர் தனக்கு ஆதரவாக வழக்காடுவதாக கூறி விட்டு மறைமுகமாக தனது எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக செயல்பட்டு டபுள் கேம் விளையாடி வருவதை இசக்கிமுத்து கண்டு பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது ஆவணங்களை தருமாறு வழக்கறிஞரிடம் இசக்கிமுத்து கேட்டு வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை நடத்த இசக்கிமுத்து வீட்டிற்கு வழக்கறிஞர் வந்ததாக தெரிகிறது. அங்கு வைத்து இருவரும் மது அருத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது மதுபோதையில் வழக்கறிஞருக்கும், இசக்கிமுத்துக்கும் வழக்கு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் தனக்கு நம்பிகை தூரோகம் செய்த வழக்கறிஞர், மீது ஏற்கனவே கடும் ஆத்திரத்தில் இருந்த இசக்கிமுத்து அரிவாளை எடுத்து வழக்கறிஞரை தலை,கை,கால் என பல இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாகவும், பின்னர் யாரும் அறியா வண்ணம் வழக்கறிஞரின் உடலை பீமநேரியில்உள்ள சாந்தியா குளத்தின் கரையோரம் உடலை போட்டு விட்டு பெட்ரோல் ஊற்றி உடலை எரித்ததாகவும் போலீஸாரிடம் சென்று தான் கொலை செய்துள்ளதாக கூறி வாக்குமூலம் அளித்து இசக்கிமுத்து சரண் அடைந்துள்ளார். இதனை சரண் அடைந்த கொலையாளி இசக்கி முத்துவிடம் ஆரல்வாய்மொழி போலீஸார் விசாரணை நடத்தினார்கள். இதில் திடிர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது இசக்கிமுத்து தனது கூட்டாளிகள் நான்கு பேர் உதவியுடன் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்து எரித்து விட்டு பின்னர் தனக்காக கொலை செய்து உதவிய கூட்டாளிகளை போலீஸாரிடம் சிக்க வைக்க கூடாது என்ற நோக்கத்தில் தான் மட்டும் கொலை செய்ததாக நேராக போலிஸாரிடம் சென்று சரண் அடைந்து தனக்கு உதவிய கூட்டாளிகளை காப்பாற்ற சரண் அடைவதாக நாடகமாடியது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து வழக்கறிஞரை கொலை செய்த வழக்கில் நாகர்கோயில் ஒழுகினசேரி பகுதியை சேர்ந்த ஐயப்பன் (26) ,தளவாய்(26) திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த வன்னிய பெருமாள்(26) திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டி என நான்கு பேரை குமரி மாவட்ட தனிப்படை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.