போதைப் பொருள் வழக்கில் கைதான வழக்கறிஞர் பூபாலன் உடனடியாக நீக்கம்!

 
ச்

நாகையில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை DRI அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி பூபாலன் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளர்.

Image

இந்நிலையில் நாகை மாவட்ட கழக செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்த திருப்பூண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு.பூபாலன் என்பவர் மீது உயர்ரக போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில், அவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக போதைப்பொருள் (NCB) மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு உளவுத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இன்று (16.10.2026) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கழகத்தின் கண்ணியம், நற்பெயர் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டதன் காரணமாக, திரு. பூபாலன் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார். இனி வரும் காலங்களில் அவருக்கும் நமது கழகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே, நாகை மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் யாரும் அவருடன் கட்சி ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.