“நான் வெள்ளை சட்டை, நீ காக்கி சட்டை... உன் சட்டையை கழற்றுகிறேன் பார்” போலீசிடம் வழக்கறிஞர் தகராறு

 
lwyer

வழக்கறிஞர் சக்திவேல் முருகன் போதையில் உதவி ஆய்வாளர் நித்யானந்தனிடம் காக்கிசட்டையை கழட்டுவேன் என பேசிய வீடியோ வைரலாகிவருகிறது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு குடிப்போதையில் வழக்கறிஞர் சக்திவேல் முருகன் என்பவர் தனது வாகனத்தை ஒட்டி வந்துள்ளர். குடிப்போதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கி சமயபுரம் சுங்கச்சாவடி அருகில் மூன்று வாகனங்கள் மீது இடித்து சேதப்படுத்தி சென்றுள்ளார். தகவலறிந்த சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் நித்யானந்தம் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்தார்.


தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் நித்தியானந்தம் அவரை விசாரணை செய்த போது  தான் ஒரு வழக்கறிஞர் எனவும் வெள்ளை  சட்டையா ? காக்கி சட்டையா? பார்ப்போம் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . தொடர்ந்து உன் சட்டையை கழட்டுகிறேன் பார் என சக்திவேல் முருகன் குடிபோதையில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக  இதுவரை வழக்கறிஞர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு வழக்கறிஞர் குடிபோதையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.