சட்ட பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் மட்டுமே நடைபெறும்!

 
law

சட்ட பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் நேரடி முறையில் மட்டுமே நடைபெறும் என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா  காரணமாக கடந்த பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.  இருப்பினும் மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.  தற்போது கொரோனா குறைந்து வருவதால் அதை அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளும் ,கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

ttn

ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவிட்டு, நேரடியாக தேர்வு எழுத சொல்வது முறை அல்ல என பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில் சட்டப்படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 20ஆம் தேதி முதல் நேரடி தேர்வாக நடைபெறும் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ttn

இந்நிலையில் தமிழக அரசின் ஆணைப்படி அனைத்து பயிற்று  வகுப்புகளும்,  நேரடி வகுப்புகளாக  நடத்தப்பட்டு வரும் நிலையிலும் ,  சட்ட கல்வியின் தரத்தை பேணும் வகையிலும்  , பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடத்தப்படும்  என்று துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கி சீர்மிகு சட்டப் பள்ளி உட்பட பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் நேரடி தேர்வாக நடைபெறும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

NEET, JEE தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – டெல்லி துணை முதல்வர்

கொரோனா தொற்று  காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக 3 செமஸ்டர் தேர்வுகளையும் இணைய வழியிலேயே நடத்தியது. அதேபோல் நடப்பாண்டும் தேர்வுகள் இனையவழியில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்த நிலையில் சட்ட பல்கலைக்கழகம் இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.