சட்டம் ஒழுங்கு பிரிவு இனி RTI சட்டத்தில் வராது! -தவெக அரசு புதிய உத்தரவு
சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி RTI சட்டத்தின்கீழ் வழங்கபடாது என தவெக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
RTI-ல் இருந்து பொதுத்துறையின் கீழ் உள்ள சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் அமைப்பாக அறிவித்து விலக்கு அளிக்கவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள், மாணவர்கள், விவசாயிகளின் போராட்டங்களின் விவரங்கள் ஆர்டிஐ-ல் அளிக்கப்படாது. காவல் மரணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளும் ஆர்டிஐ-ல் பெற முடியாது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24(4)-ன் கீழ் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது (சட்டம்-ஒழுங்கு) துறை ஒரு 'உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு' (Intelligence and Security Organization) என அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் செயல்பாடுகள், மனித உரிமை மீறல்கள் அல்லது சட்டம்-ஒழுங்கு தொடர்பான பொது முக்கியத்துவம் வாய்ந்த விவரங்களை மக்கள் தெரிந்துகொள்வது இதன் மூலம் முற்றிலும் தடுக்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய சட்டப் பிரிவு 24(4)-ன் கீழ் சட்டம்-ஒழுங்கு துறையைக் கொண்டுவருவது, துறை சார்ந்த முறைகேடுகளை மூடி மறைக்க வழிவகுத்துவிடும் என்ற கண்டனம் எழுந்துள்ளது.

