"நதி நீர் இணைப்புக்கு சொன்னபடி ரஜினிகாந்த் ரூ.1 கோடி தருவார்" - லதா ரஜினிகாந்த்
காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை அரசாங்கம் எந்த நிமிடத்தில் தொடங்கினாலும், ரஜினிகாந்த் தனது வாக்குறுதியின்படி ரூ.1 கோடி நிதியை வழங்குவார் என லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னையில் ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் ‘மக்கள் மேடை’ இணையதளத்தை லதா ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவுக்கு புதிய கல்வி முறையைத் தொடங்கியுள்ளோம். சமூக நலத்திட்டங்களை முன்னெடுப்போம். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். நாட்டுப்பற்றே எல்லாவற்றையும் விட மேலானது. காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை அரசாங்கம் எந்த நிமிடத்தில் தொடங்கினாலும், ரஜினிகாந்த் தனது வாக்குறுதியின்படி ரூ.1 கோடி நிதியை வழங்குவார் . மக்கள் பிரச்சனைதான் அரசாங்கத்தின் பிரச்சனை. மக்களின் முக்கிய பிரச்சனைகளை அடையாளம் கண்டு அரசின் கவனத்திற்கு ‘மக்கள் மேடை இயக்கம்’ கொண்டு செல்லும். ரஜினிகாந்த் 100% எனக்கு ஆதரவு அளிக்கிறார். ரஜினிகாந்த் சப்போர்ட்டைவிட அவருடைய ஆசிர்வாதம் இருப்பதுதான் எங்களுக்கு முக்கியம்” என்றார்.

