மறைந்த நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி..!

 
1

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வரும் சவுகார் ஜானகியின் வயது 94. இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் நடிகை சவுகார் ஜானகி நேற்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சவுகார் ஜானகி உடலுக்கு காலை முதலே சினிமா பிரபலங்களும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். எம்எஸ் பாஸ்கர், நிழல்கள் ரவி, ஷாலினி அஜித், நாசர் தலைமையிலான நடிகர் சீங்க நிர்வாகிகள், சிவகுமார், குட்டிபத்மினி, சத்யராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு அரசு சார்பில் சபாநாயகர் JCD பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன் அஞ்சலி மறைந்த நடிகை சௌகார் ஜானகி உடலுக்கு அரசு சார்பில் சபாநாயகர் JCD பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன் அஞ்சலி