மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் தகனம் செய்யப்பட்டது!

 
tt

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

nt

இயக்குனரும்,  நடிகருமான மாரிமுத்து நேற்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். சீரியல் டப்பிங் கொடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மூச்சு திணறல் ஏற்படவே தனது காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரிமுத்துவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினரை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

tn

இதையடுத்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  தேனி பசுமலைதேரியில் மாரிமுத்துவுக்கு இறுதி சடங்கு நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்த நிலையில்,  அங்கும்  ஊர் மக்களும் , ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வந்தனர். 

TN

இந்நிலையில் மறைந்த நடிகர்  மாரிமுத்துவின் உடலானது இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டது. இயக்குனராகவும் ,  உதவி இயக்குனராகவும் வலம் வந்த மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.  சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . மாரிமுத்துவின் இந்த மறைவு பலரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது கடின உழைப்பும் , நடிப்பு திறமையும் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.