கடைசிநேரத்தில் மூச்சிறைக்க ஓடி வேட்புமனு தாக்கல் – இந்துமதியை பாதுகாக்க 50 போலீசார் குவிப்பு

கடைசிநேரத்தில் மூச்சிறைக்க ஓடி வேட்புமனு தாக்கல் – இந்துமதியை பாதுகாக்க 50 போலீசார் குவிப்பு

ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று வரைக்கும் ஆம்பூர் அருகே இருக்கும் நாயக்கனேரி ஊராட்சிப் பகுதியில் உள்ள 9 வார்டுகளிலும் மலைக் கிராம மக்கள் யாரையும் வேட்புமனுத்தாக்கல் செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர்.

கடைசிநேரத்தில் மூச்சிறைக்க ஓடி வேட்புமனு தாக்கல் – இந்துமதியை பாதுகாக்க 50 போலீசார் குவிப்பு

நாயக்கனேரி ஊராட்சி பகுதியை பட்டியலின மக்கள் போட்டியிடும் தொகுதியாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வந்திருக்கின்றனர். இதனால் தான் யாரையும் வேட்புமனுத்தாக்கல் செய்ய விடாமல் தடுத்து வந்திருக்கின்றனர். இத்தனை நாளும் அவர்கள் எதிர்ப்பை மீறி யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலை இருந்தபோது இறுதி நாளான இன்று மாலை கடைசி நேரத்தில் இந்துமதி என்ற பெண் அவர்களின் எதிர்ப்பை மீறி மூச்சிரைக்க ஓடி சென்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

கடைசிநேரத்தில் மூச்சிறைக்க ஓடி வேட்புமனு தாக்கல் – இந்துமதியை பாதுகாக்க 50 போலீசார் குவிப்பு

10 நாட்களாக வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று அவ்வூரார் வலியுறுத்தியும் இந்துமதி வேட்புமனு தாக்கல் செய்ததால் அவருக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்துமதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, வேட்புமனுத் தாக்கல் செய்த பெண்ணின் பெண்ணுக்கும் அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி தெரிவித்திருக்கிறார்.

கடைசிநேரத்தில் மூச்சிறைக்க ஓடி வேட்புமனு தாக்கல் – இந்துமதியை பாதுகாக்க 50 போலீசார் குவிப்பு

இந்துமதியின் பாதுகாப்பிற்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.