அதிமுக உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பங்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் எப்போது?

 
admk

வருகிற 21ஆம் தேதியே அதிமுகவில் பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

admk office

இதுதொடர்பாக அதிமுக   பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக்கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தில், கடந்த 5.4.2023 முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 4.5.2023 முதல் பெறப்பட்டு வருகின்றன.

eps
இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பிப்பதற்கான காலக் கெடுவை நீட்டித்துத் தருமாறு, 10.9.2023 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 21.9.2023 - வியாழக் கிழமை மாலை 5 மணிவரை நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதி வாய்ப்பாகும்.

EPS
புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே, கழக அமைப்புத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும்; கழகப் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.