விமானி அறையில் லேசர் லைட் அடித்து அட்டகாசம்! கோவையில் பரபரப்பு

 
லேசர் லேசர்

பெங்களூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இண்டிகோ விமானம் தரை இறங்கும் போது விமானி அறையில் லேசர் லைட் அடித்தது தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பீளமேடு பன்னாடு விமான நிலையத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடு என ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு  7.50  மணிக்கு பெங்களூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம், தரையிறங்க 3.5 கிலோமீட்டர் தூரம் இருக்கும் பொழுது, தரையில் இருந்து  விமானி அறையின் வலது பக்கத்தில் லேசர் லைட் அடித்துள்ளனர். தரையில் இருத்து விமானத்திற்கு லேசர்  லைட் அடிக்கபட்டது 

இதுதொடர்பாக , விமானி தரையிறங்கிய பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பீளமேடு காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானி கூகுள் மேப்பை பார்த்து அந்த இடம் மைலம்பட்டி அல்லது வெள்ளானைபட்டியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ள நிலையில், பீளமேடு போலீசார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.