பழனியில் ரூ.100 கோடி நிலம் சட்டவிரோதமாக பதிவு- அமைச்சர் ரமேஷ்க்கு தொடர்பா?

 
ரமேஷ்

அமைச்சர் ரமேஷ் உறவினர் பெயரில் பழனி அடிவாரத்தில் நூறு கோடி மதிப்புள்ள சொத்து சட்ட விரோதமாக பதிவு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட அவதூருக்கு பொய் தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். 


பழநி அடிவாரம் தண்டபாணிசாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை சட்டவிரோதமாக பதிவு செய்த வழக்கில்,  அமைச்சர் ரமேஷின் உறவினர்களுக்கு தொடர்பு என சில கட்சிகளால் பொய் செய்தி பரப்பப்படுகிறது என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் கொடுத்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள அவர்,  சட்டவிரோதமாக நிலத்தை பதிவு செய்த தனிநபர்கள் மீது துறைரீதியில் நடவடிக்கை, போலீசார் விசாரணை நடத்தப்படும் என்றார். எனக்கு அப்படி உறவினர்கள் யாரும் இல்லை, எனக்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லாத விஷயத்தில் வன்மத்துடன் தொடர்புப்படுத்தி செய்தி பரப்புவதாக அமைச்சர் ரமேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.