தவெக அமைச்சர் நிர்மல் குமார் மீது நில அபகரிப்பு புகார்

 
ச்

அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் அவரது தந்தை மீது அவரது சொந்த ஊரைச் சேர்ந்த உக்ரபாண்டியன் என்பவர் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.

Image

தமிழகத்தில் தற்போது அமைந்துள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது அவரது சொந்த ஊரைச் சேர்ந்த நபர் ஒருவர் நில அபகரிப்பு புகார் அளித்துள்ளார். அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் முன்பு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய கட்சிகளில் இருந்தபோது,  அவரது சொந்த ஊரில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுப் பலரது நிலங்களை ஆக்கிரமித்து அபகரித்துக் கொண்டதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகத் தமிழக அரசியலில் தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக தரப்பில் ரூ. 50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.  இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியிலேயே தற்போது அவர் மீது இந்த நில அபகரிப்புப் புகார் கிளம்பியுள்ளது.