திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!
Jun 6, 2026, 09:37 IST1780718869440
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் மு.வீரபாண்டியன் அறிக்கை:
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில், தமிழக அரசு, தன் நிலைப்பாட்டை வரும், 22ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தின், மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நடப்பட்ட சர்வே துாணில், தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என, சில அமைப்பை சேர்ந்தவர்கள் வற்புறுத்தி, மோதல் நிலையை உருவாக்கி வருகின்றனர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் பிரச்னையில், தமிழக அரசு கடந்த காலத்தில் மேற்கொண்ட சரியான நிலையை, வரும் காலத்திலும், உறுதியோடு முன்னெடுக்க வேண்டும். சர்வே துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

