காதலி தன்னுடன் பேச மறுத்ததால் கூலி தொழிலாளி தற்கொலை

 
suicide

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனியார் நூர் பாலையில் பணிபுரியும் இளைஞர்  காதலி தன்னுடன் பேச மறுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

suicide

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படையில் தனியார்  நூற்பாலைகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான வட மாநில மாநில தொழிலாளர்கள் வந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஹரி கிருஷ்ணா என்னும் நூற்பாலையில் சட்டீஸ்கர் மாநிலம்  பத்வத் மாவட்டத்தைச் சேர்ந்த லஷ்முகஷ்யப்,
புனித்காஷ்யப்  என்ற இரண்டு சகோதரர்கள் பணி புரிந்து வந்தனர். இதில் மூத்த சகோதரர் லஷ்முகஷ்யப்  தன்னுடன் பணிபுரிந்து வந்த பெண் தொழிலாளியை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், லஷ்முகஷ்யப்-ன்  காதலி அவருடன் பேச மறுத்துவிட்டார். 

ஏமாற்றத்துடன் இருந்த லஷ்முகஷ்யப்  மது போதைக்கு அடிமையாகி விட்டார். இரண்டு நாட்களாக  வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இன்னிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்ற இளைய சகோதரர் இன்று காலை வரும் பொழுது தங்களுடைய அறை உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதனை அடுத்து கதவை உடைத்து கொண்டு உள்ளே போய் பார்த்தபொழுது, லஷ்முகஷ்யப்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்தார். இது குறித்து வெப்படை போலீசாருக்கு தகவல் அளித்ததின் பெயரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இளைஞரின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Death

வெளி மாநில இளைஞர்கள் வேலைக்காக தமிழகம் வந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வட மாநில இளைஞர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.