திருப்பரங்குன்றம் மலையில் அமர்ந்து அசைவ உணவு உண்ட நவாஸ்கனி வருத்தம் தெரிவிக்க வேண்டும்- எல்.முருகன்

 
L.Murugan

தமிழர் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் கோவில் மலையில் அமர்ந்து, தமிழகத்தின் மதநல்லிணக்க பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அசைவ உணவு உண்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ்கனி அவர்களின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Image

இதுதொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தமிழர் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் கோவில் மலையில் அமர்ந்து, தமிழகத்தின் மதநல்லிணக்க பண்பாட்டை சீர்குலைக்கும் வகையில் அசைவ உணவு உண்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ்கனி அவர்களின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன்.

மதநல்லிணக்கம் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் பேசியிருப்பதாக கூறிவிட்டு, இந்து சமுதாய மக்களின் புனித மலையாக போற்றப்படுகின்ற திருப்பரங்குன்றம் முருகன் மலையில் அமர்ந்து கும்பலாக சென்று அசைவம் சாப்பிட்டுள்ளார். தொடர்ந்து மதநல்லிணக்க பண்போடு அமைதியாக இருந்து வந்த மக்களிடத்தில் பிரிவினையை தூண்டுகின்ற நோக்கில், ஒரு பிரிவினைவாதியைப் போல் செயல்பட்டிருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ்கனி.

l murugan press meet

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் விரும்பத்தகாத சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை திசை திருப்பும் நோக்கத்தோடு, திருப்பரங்குன்றம் மலைமீது சென்று அசைவ விருந்து அளிக்க முற்பட்டவர்களால் ஏற்பட்ட பதற்றமான சூழலை, ரகசியப் பிரமாணம் மேற்கொண்டு பதவியேற்ற பாராளுமன்ற உறுப்பினர் மேலும் பதற்றமானதாக மாற்றுவது எப்படி ஏற்கத்தக்கதாகும். மேலும், தமிழகத்தில் எல்லோருக்குமான மற்றும் சமூகநீதி ஆட்சி வழங்குவதாக கூறிக்கொள்ளும் போலி திராவிட மாடல் திமுக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும், இந்து சமுதாய விரோதப் போக்கை கைவிடப் போவதில்லை என்பதும் இன்று நடந்த சம்பவத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.


இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்வது சமூகத்தின் அமைதியை நிச்சயம் சீர்குலைக்கும். ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ்கனி மேற்கொண்ட இந்தச் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இச்செயல் புரிந்ததற்காக தமிழக மக்களிடத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதையும் கூறிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.