நெல்லையில் பிராமண சிறுவனின் பூணூல் அறுப்பு; இது தான் திராவிட மாடல் ஆட்சியா..?- எல்.முருகன்

 
l murugan press meet

திருநெல்வேலியில் பிராமண சிறுவனின் பூணூல் அறுக்கப்ப்டடது. இது தான் திராவிட மாடல் ஆட்சியா..? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Image

இதுதொடர்பாக எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருநெல்வேலி மாவட்டம் டிவிஎஸ் நகரை சார்ந்த சிறுவனை தாக்கியதோடு, அவன் அணிந்திருந்த பூணூலை அறுத்தெறிந்து, 'இனி பூணூல் அணியக்கூடாது' என்று மிரட்டியும் சென்றிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக அவரது இல்லத்துத்துக்கு சென்று ஆறுதல் கூறினேன்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ஓர் மதத்தவரின் புனித பொருட்களை அவமதிப்பது, இழிவுபடுத்துவது, கேலி செய்வது ஆகியவை பெரும் குற்றமாகும். ஆனால் தமிழகத்தில் அரை நூற்றாண்டிற்கு மேலாக திராவிடத்தின் பெயரால் மத நம்பிக்கை, இந்துக்களுக்கு எதிராக ஓர் மக்கள் விரோத சிறு கும்பல் தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சமூக விரோத கொடும் செயலை செய்த நபர்களை உடனடியாக கண்டுபிடித்து முறையாக விசாரித்து அவர்கள், யார் தூண்டுதலால் இந்த செயலை செய்தார்கள் என்பதையும் கண்டுபிடித்து அந்த திரைமறைவு கருப்பு நபர்களையும் சட்டத்தின் முன்னாள் நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.