ஆறு முதல் அறுபது வயதான மக்களின் அன்புக்கு பாத்தியப்பட்டவர் எம்ஜிஆர்- எல்.முருகன்

 
L Murugan

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற அவரது பாடல் போல இன்னும் மக்கள் மனதில் ஆழமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கறுப்பு MGR., காவி MGR, காங்கிரஸ் MGR… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?

எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, இவரின் நண்பர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் பாெதுச்செயலாளாராக ஆக்கி, சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர். 

Rajya Sabha Bypoll: Union Minister L Murugan Likely To Be Elected Unopposed  From Madhya Pradesh Seat

எம். ஜி. ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர். தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர். ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர். எளிய மக்கள் அனைவராலும் “புரட்சித் தலைவர்” என்று அன்போடு அழைக்கப்பட்டவர்,


அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்காக பணி செய்தவர். தமிழ்நாடு முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, தெய்வத்திரு டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரனின் பிறந்தநாளான இன்று, அவரைப் போற்றி வணங்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.