1 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் திட்டத்திற்கான முதல் தவணை வழங்கப்பட்டது: எல்.முருகன்

 
l murugan

பிரதம மந்திரியின் மலைவாழ்  பழங்குடியினரின் நலன் காக்கும் பெருந்திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் இலவச வீடு கட்டும் திட்டத்திற்கு முதல் தவணை நிதியை பிரதமர் மோடி இன்று வழங்கியதாக பாஜக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதம மந்திரியின் மலைவாழ்  பழங்குடியினரின் நலன் காக்கும் பெருந்திட்டத்தின் கீழ் 1 லட்சம் பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் இலவச வீடு கட்டும் திட்டத்திற்கு முதல் தவணை நிதியை பிரதமர் மோடி இன்று வழங்கினார். பாரதம் முழுக்க காணொளி வாயிலாக ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதி, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மண்வயல் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடைந்த பழங்குடியினருடன் பாரதப் பிரதமர் காணொளி வாயிலாக உரையாற்றினார். திட்டங்கள் மூலம் தங்கள் வாழ்க்கை தரம்  உயர்ந்துள்ளதாக கூறிய பழங்குடியினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

Image

பின்னர் 50 பயனாளிகளுக்கு 46 லட்சம் ரூபாய் மதிப்பில் விவசாய கடன், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, சாதி சான்றிதழ், ஆயுஷ்மன் பாரத் அட்டை மற்றும் 6 பழங்குடியின குழுக்களுக்கு அவர்களது தயாரிப்புகளுக்கான உற்பத்தி நிதி ஆகியவற்றை அரசு அதிகாரிகளுடன் இணைந்து வழங்கினேன். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள், ஒவ்வொரு நாளும் தேசத்தின் கடைக்கோடி மனிதர்களும் பயன்பெறுவதை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இன்று நடந்த நிகழ்வும் சாட்சியாகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.