மகாகவி பாரதியாரின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்து போற்றுவோம் - எல்.முருகன்!
மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம். தமிழ் மொழி மீது கொண்ட பற்றாள், மக்கள் மனதில் விடுதலை உணர்வை விதைத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு தினத்தில் அவர்தம் பங்களிப்புகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்”
— Dr.L.Murugan (@Murugan_MoS) September 11, 2023
தமிழ் மொழி மீது கொண்ட பற்றாள், மக்கள் மனதில் விடுதலை உணர்வை விதைத்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு தினத்தில் அவர்தம் பங்களிப்புகளை நினைவு கூர்ந்து போற்றுவோம். pic.twitter.com/YQdfkxrxdq
இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், கல்வி, தமிழ் மொழி, சமூக நீதி, பெண் விடுதலை, தேசியம் என அனைத்து துறைகளிலும் தனது எண்ணங்களாலும் எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது. திருக்குறள் முதலான தமிழின் பெருமை மிகுந்த நூல்கள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. உலகிற்கே பாரதம் குருவாக விளங்கும் என்ற அவரது கனவும் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், சுதந்திரப் போராட்டத்தையும் தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர்; தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டவர்; எம் மகாகவியின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.