ஞானசேகரன் விவகாரம்- திமுக உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்: எல்.முருகன்

 
ச்

அம்பேத்கருக்காக போராடிய திருமாவளவன் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு போராட வேண்டும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.

எல் முருகன்

ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர்  மோடி வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து கேட்டார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய இணை அமைச்சர எல்.முருகன், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தை கண்டித்து மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசு குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும். இந்த விவாகரத்தில் ஒருவர் மட்டும்தான் குற்றவாளி என்று நிறுத்தி விடாமல், இவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். குற்றவாளி ஞானசேகரன் எங்கள் கட்சியில் இருந்தார், நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என திமுக உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு எங்கள் கட்சி இல்லை, நிர்வாகி இல்லை என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் இருக்கிறது.

திருமாவளவனை தகுதியற்ற தலைவராக தான் நான் பார்க்கிறேன் - எல்.முருகன்..!

அனைத்து வழக்குகள் போன்று விசாரிக்காமல் இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க தமிழ்நாடு அரசால் முடியவில்லை என்றால் சிபிஐயிடம் கொடுத்து விசாரிக்க வேண்டும். மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரம் மிகவும் கேவலமானது. அம்பேத்கருக்காக போராடிய திருமாவளவன் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக நியாயம் கேட்டு போராட வேண்டும்” எனக் கூறினார்.