பாரத மக்கள் அனைவருக்கும் 75-வது குடியரசு தின வாழ்த்துகள் - எல்.முருகன்

 
L Murugan

75வது குடியரசு தினத்தையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சுதந்திரம் அடைந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, இறையாண்மை கொண்ட, மதச்சார்பற்ற, முழு ஜனநாயகம் கொண்ட “குடியரசு” தேசமாக உருவெடுத்த நாம், இன்று உலகின் முன்னணி ஜனநாயக தேசமாக திகழ்கிறோம். நமக்கென்று தனித்து “அரசியலமைப்பு சட்டம்” உருவாக்கி, நடைமுறைக்குக் கொண்டு வந்த, நமது அறிவார்ந்த மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை இத்தினத்தில் நினைவுகூர்ந்து போற்றுவோம்.


சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் மேம்பட, பாரத மக்கள் அனைவருக்கும் 75-வது குடியரசு தின வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.