இலங்கையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க நடவடிக்கை- எல்.முருகன்
10 கோடி உறுப்பினர்களுடன் உலகத்திலேயே அதிகமான தொண்டர்களுடன் இருக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “கடந்த இரண்டாம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் இதுவரை ஐந்து கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். நாடு முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் 11 கோடி பேரை இணைக்க இலக்கு வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி பேரை இணைக்க இலக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2014 மோடி ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் சுட்டு கொலை செய்யும் நிகழ்வு நடந்து வந்தது. மோடி ஆட்சிக்கு பின்னர் அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. எல்லை தாண்டி மீனவர்கள் செல்லாமல் இருக்கவும் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கவும் மீனவர்களுக்கு அதிநவீன படகுகள் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களிடம் 10% பணம் இருந்தாலே 60% மானியமாகவும் 30 சதவீதம் வங்கி கடன் ஏற்பாடு செய்யப்பட்டும் ரூ.1.30 லட்சம் மதிப்பிலான படகுகள் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களின் மாற்று தொழிலாக கடல்பாசி உற்பத்தியும் ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் ஒரு லட்சம் படங்களுக்கு இதுவரை பொருத்தப்பட்டுள்ளது தொடர்ந்து அந்த கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி சென்றாள் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மத்திய துறை அமைச்சகம் மூலம் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாதி மதம் பற்றி திமுகவினர் பேசக்கூடாது. தமிழகத்தில் தலித்துகளுக்கு ஒரு சுடுகாடு மற்றவர்களுக்கு ஒரு சுடுகாடு என இரட்டை சுடுகாட்டு நடைமுறை இன்றும் இருந்து வருகிறது. பட்டியலிட மாணவர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளில் தமிழக முதலமைச்சரும் கனிமொழி எம்பியும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் சாதி மதம் குறித்து பேச வேண்டும்.
சாதி மதம் குறித்து திமுக பேசுவது நியாயமற்றது. கோவில்களில் அரசுக்கு என்ன வேலை? கோவில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. கோவில்களில் உள்ள பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய சனாதன தர்ம ரக்ஷண வாரியம் அமைக்கும் தருணம் இது தான் என எண்ணுகிறோம். பவன் கல்யாண் கருத்தை குறித்து தேசிய அளவில் ஆலோசனை நடத்தி அதற்கான தீர்வு எடுக்கப்படும். கருத்துகணிப்பு என்பது பொய்யான ஒன்று மகாராஷ்டிரா உள்ளிட்ட நான்கு மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெறும். நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும். பாஜகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தமிழகத்தில் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடந்து முடிந்து தேர்தலில் 18% வாக்குகள் பெற்றோம் வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்” என்றார்.