கள்ளச்சாராய பலிக்கு மு.க.ஸ்டாலின் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்: எல்.முருகன்

 
l murugan press meet

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரத்தில் உண்மை வெளிவரவே சிபிஐ விசாரணை கோருகிறோம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

BJP L. Murugan - Press Meet

சென்னை திருவல்லிக்கேணியில் பிரதமர் நரேந்திர மோடியின் மன்கிபாத் நிகழ்ச்சி பொதுமக்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய  மந்திரி எல்.முருகன்  கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “ஏற்கனவே முதல்வர் ஸ்பெயின் சென்று எவ்வளவு முதலீடு வந்தது என்பதை கூற வேண்டும். அமெரிக்காவில் எத்தனை நிறுவனங்களை சந்திக்க உள்ளார்கள் என்பதை வெளிப்படையாக கூற வேண்டும். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரித்தால் தான், கள்ளச்சாராய சம்பவத்தில் உண்மை வெளிவரும். மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்தது, அந்த வழக்கு என்ன ஆனது? கள்ளச்சாராய பலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

திமுக கவனத்தை வளர்ச்சியில் செலுத்த வேண்டும் மதுவில் செலுத்தக்கூடாது. ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் மக்களை ஏமாற்ற முதலமைச்சர் முயற்சிக்கிறார். கேரளாவில் மலைவாழ் மக்களால் குடை தயாரிக்கப்படுவது என்பது பெரிய தகவல். தாயின் நினைவாக மரம் நடவேண்டும் என்பது போற்றுதலுக்குரியது” என்றார்.