பிரதமர் மோடி தமிழக வருகை மூலம் தமிழகத்தில் ஒளிபிறக்க போகிறது- எல்.முருகன்
பிரதமர் மோடி தமிழக வருகை மூலம் தமிழகத்தில் ஒளிபிறக்க போவதாக ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தை மாதம் தமிழகத்தில் சூழந்து இருக்கின்ற இருள் நீங்கி ஓளி பிறக்க போகிறது. பிரதமர் மோடி நாளை சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை துவக்கி வைப்பதுடன், முக்கிய நிகழ்வாக டிடி பொதிகை சேனல் நீண்ட ஆண்டுகளாக மக்களின் விருப்பமாக புதிய எண்ணங்களுடன், வண்ணங்களுடன் மாற்றியிருப்பதை பிரதமர் தொடங்கி வைக்க இருக்கிறார். அயோத்தி ராமர் கோவில் தொடர்பான அமைச்சர் உதயநிதி கருத்து திமுகவின் பிற்போக்குத்தனத்தை காட்டுகிறது.
ராமர் கோவில் 500 ஆண்டுகள் கனவு, லட்சியம், தியாகங்கள் நிறைவேறி , எதிர்பார்ப்புகளுடன் திருவிழா 22 ம் தேதி நடைபெறவுள்ளதை இந்தியா முழுவதும் கொண்டாடி வருகின்றனர், இன்னும் பிற்போக்குத்தனமாக பேசும் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்” எனக் கூறினார்.