திமுக எனும் நரகாசுரனை தேர்தல் மூலம் மக்கள் அழிப்பார்கள்- எல்.முருகன்

 
L.Murugan

தீபாவளி பண்டிகைக்கு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.

Rajya Sabha Bypoll: Union Minister L Murugan Likely To Be Elected Unopposed  From Madhya Pradesh Seat


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இணையமைச்சர் எல்.முருகன், “அமைச்சரின் குடும்பத்தினரே தாக்கப்படுவதும், கோயில்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவங்களுமே தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் இருப்பதற்கு எடுத்துக்காட்டு. சென்னை போன்ற மாநகரங்களிலேயே மருத்துவர்கள் இல்லை, 108 ஆம்புலன்ஸ் சேவை எளிதில் கிடைக்கவில்லை என்றால், ஊட்டி, கூடலூர் போன்ற பகுதிகளுக்கும், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கும் எப்படி கிடைக்கும்?

தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்பினுடைய மிகப்பெரிய அவலம் நேற்று சென்னையில் நடைபெற்ற சம்பவம். தீபாவளி பண்டிகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும். நரகாசுரனை ஒழித்து எப்படி தீபாவளி பண்டிகை வந்ததோ அதேபோல, திமுக எனும் நரகாசுரனை 2026 தேர்தல் மூலம் மக்கள் அழிப்பார்கள். அதை நாங்கள் கொண்டாடுவோம். தேவாலயங்களுக்கும், மசூதிக்கும் செல்ல தெரிந்த முதலமைச்சருக்கு ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல முடியவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.