எல்.முருகன் - முன்னாள் சபாநாயகர் தனபால் திடீர் சந்திப்பு..!
எல்.முருகன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிடுவதை முன்னிட்டு, அதிமுக மூத்த தலைவர் மற்றும் அவிநாசி தொகுதியின் தற்போதைய சட்டசபை உறுப்பினர் தனபாலை நேரில் சந்தித்து ஆசி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் சேவூர் வேலுச்சாமி உடனிருந்தார். இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.
மூத்த தலைவரான தனக்கு அதிமுகவில் சீட் தரவில்லை என்றும், அது பற்றி யாரும் தன்னிடம் பேசக்கூட இல்லை என்றும், உடல் நலமின்றி இருந்தபோது தன்னை யாரும் வந்து பார்க்கவில்லை என்றும் சமீபத்தில் தனபால் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரை அதிமுகவினர் யாரும் பொருட்படுத்தாத நிலையில், இப்போது எல்.முருகன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன், தவெகவில் இணைந்த தனபால் மகன் லோகேஷ், ராசிபுரம் தொகுதியில் அந்த கட்சி சார்பில் தேர்தல் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதை முன்னிட்டு, அதிமுக மூத்த தலைவர் மற்றும் அவிநாசி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக பதவி வகித்தவருமான… pic.twitter.com/Rcnws9WQtt
— Dr.L.Murugan (@DrLMurugan) April 5, 2026

