அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் - எல்.முருகன்!

 
L Murugan

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மங்களகரமான இந்த தீபாவளி பண்டிகை மக்கள் உள்ளங்களில் உள்ள துன்பங்களை அகற்றி, அனைவரின் இல்லங்களிலும் தீப ஒளியால் மகிழ்ச்சி பரவ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை  தெரிவித்துக் கொள்கிறேன்.


தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தை இலக்கியங்களும் எடுத்துச் சொல்கின்றன. அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர வருகத்தில் அம்ம. என்ற அகநானுற்று பாடல் பழந்தமிழர் அமாவாசை நன்னாளில் தீபம் ஏற்றி வழிப்பட்டதை விளக்குகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.