அனைத்து மக்களுக்கும் “தைப்பூசத் திருநாள்” வாழ்த்துகள் - எல்.முருகன்
தைப்பூச திருநாளை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே, உடல் பற்றிய பிணி ஆறுமே.தமிழர் பெருங்கடவுள், அய்யன் முருகனுக்கு உகந்த நாளான “தைப்பூசம்” தினமான இன்று, தமிழகம் கடந்து முருகனை வழிபடும் அனைத்து மக்களுக்கும் “தைப்பூசத் திருநாள்” வாழ்த்துகள். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, தமிழர்கள் இத்தினத்தை திருவிழாவாக கொண்டாடி வருவதாக, திருஞானசம்பந்தரின் “தேவாரப்” பாடல்களில் குறிப்புகள் உள்ளன.
“முருகனைக் கூப்பிட்டு⁰முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே!
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 25, 2024
உடல் பற்றிய பிணி ஆறுமே!”
தமிழர் பெருங்கடவுள், அய்யன் முருகனுக்கு உகந்த நாளான “தைப்பூசம்” தினமான இன்று, தமிழகம் கடந்து முருகனை வழிபடும் அனைத்து மக்களுக்கும் “தைப்பூசத் திருநாள்” வாழ்த்துகள்.
சுமார் 1500 ஆண்டுகளுக்கு… pic.twitter.com/ruzePym7sR
இத்தனை வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தை, தமிழக அரசு “அரசு விடுமுறையாக” அறிவிக்க வேண்டும் என்று, நாம் மேற்கொண்ட “வேல் யாத்திரையின்” போது வைத்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஆட்சியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்ட தைப்பூசத் திருநாளை நாம் கொண்டாடி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.