வெற்றி துரைசாமியின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் - எல்.முருகன்

 
L.Murugan

முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள செய்தி துயரத்தில் ஆழ்த்துகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், இமாச்சல பிரதேசம் சட்லெஜ் நதியில் நடந்த கார் விபத்தில் தேடப்பட்டு வந்த, முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சென்னை மாநகராட்சி மேயருமான அண்ணன் திரு.சைதை துரைசாமி அவர்களின் அன்புமகன், திரு.வெற்றி துரைசாமி அவர்கள், உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள செய்தி துயரத்தில் ஆழ்த்துகிறது.


அண்ணன் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கு நேர்ந்துள்ளது, பெருந்துக்கம். இந்த சமயத்தில், அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.‘வெற்றி துரைசாமி’ அவர்களின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.