பிரதமர் மோடிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் வாழ்த்து!

 
l murugan

பிரதமர் மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் மோடிக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மக்கள் நலன் விரும்பும் மாபெரும் தலைவர், சர்வதேசம் போற்றும் சமூக நீதி காவலர், புதிய இந்தியாவின் சிற்பி, பாரத அன்னையின் தவப்புதல்வன் "பார் போற்றும் உன்னத தலைவர்" பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக பணிவு மிகுந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  


எல்லோருக்கும் சம வாய்ப்பு நாட்டின் வளர்ச்சியையே தன் இதய துடிப்பாக கொண்டிருக்கும் உன்னதத் தலைவர். ஒரு நாட்டின் பிரதமர் தன் நாட்டுக்கு மட்டும் பிரதமராக இல்லாமல் உலக தலைவர்கள் போற்றும் அகிம்சை வழி தலைவராக பாரதத்தாய் கண்ட வலிமை மிக்க பிரதமர் மோடி ஜி அவர்களின் 73-வது பிறந்தநாளில் அவரை வாழ்த்துவோம் கொண்டாடுவோம். பாரதப்பிரதமர் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ்ந்து, பாரத தேசத்தை வழிநடத்திச் செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.
 இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.