பிரதமர் மோடி அமைச்சரவையில் மீண்டும் இடம்பெற்ற எல்.முருகன்

 
tt

பிரதமர் மோடி அமைச்சரவையில் 30 கேபினட் அமைச்சர்கள் உள்பட 72 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி

இந்திய நாட்டின் பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிபிரமாணம் செய்துவைத்தார். நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டனர். பிரதமராக மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரான சிவராஜ் சௌஹான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

L.Murugan

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில்  தோல்வியடைந்த எல்.முருகன்  இணையமைச்சராக பதவியேற்றுள்ளார். தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.