செல்போனில் ஜனநாயகன் படம் வந்தால் டெலீட் செய்யுங்கள் - கேவிஎன்

 
ச்

செல்போனில் ஜனநாயகன் படம் வந்தால் டெலீட் செய்யுங்கள் என பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜனநாயகன்

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் மட்டுமே முதலில் கசிந்த நிலையில், நேற்று இரவு முழு படத்தையும் சட்டவிரோதமாக  சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டனர். முதலில் ஓரிரு காட்சிகள் மட்டும் வெளியான நிலையில், இரவு முழு திரைப்படமும் வெளியானது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஜனநாயகம் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் கிரைமில் படக்குழு தரப்பில் புகார் அளித்துள்ளது.

Image

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்சன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ விஜயின் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் முழுமையாக வெளியாகியுள்ளது. மர்ம நபர்கள் சிலர் ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்து அதிக அளவில் பகிர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயகன் படத்தை செல்போனில் வைத்திருப்பவர்கள், பார்ப்பவர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்ஆப், இன்ஸ்டா, டெலிகிராம் மூலம் ஜனநாயகன் படத்தை பகிர்வோரை கண்டுபிடிப்பது எளிது. சமூகவலைதளம் மூலம் வரும் ஜனநாயகன் படத்தை பகிரவோ, செல்போனில் சேமித்தோ வைக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளது.