“தவெகவில் 234 தொகுதிக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா?”- குஷ்பு

 
குஷ்பு

தமிழிசை அக்காவுக்கு மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்படும், அதை நான் எதிர்பார்க்கிறேன் என்று நடிகை குஷ்பு கூறினார்.

இனி தான் விளையாட்டு ஆரம்பம்! என் தம்பி விஜய்க்கு அட்வைஸ் தேவையில்லை- குஷ்பு பேட்டி

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் நடிகை குஷ்பு பங்கேற்றார். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழ்நாடு- புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். மக்கள் உற்சாகமாக உள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக எத்தனை தொகுதி போட்டியிடுகிறது. எந்தெந்த இடம் என்று இன்னும் முடிவாகவில்லை. மக்களுக்காக நாங்கள் வேலை பார்க்கிறோம். எனக்கு சீட்டு இருக்கிறதா? இல்லையா? என்பதில் முக்கியமில்லை. பிரதமரின் அறிவுறுத்தல் படி தமிழ்நாட்டுக்கு என்ன சேவை செய்ய முடியும் என்ற அறிவுறுத்தின் பேரில் நோக்கி பயணிக்கிறோம். குஷ்பூ நிற்கிறாரா? நிக்கவிலையா? என்பது தேவையில்லை.

புதுச்சேரி தேர்தல் பிரச்சாரத்திற்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, அவர் நிச்சயமாக வருவாங்க. அவருக்கு வேறு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ கட்சிக்காக அதிகமாக உழைத்தவர்கள். தமிழிசை அக்காவுக்காக மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்படும் அதை நான் எதிர்பார்க்கிறேன். கட்சியில் முக்கியத்துவம் இல்லை. பதவி வழங்கவில்லை என்று சரத்குமார் அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக மேலிடம் என்ன செய்யுமோ அதை செய்யும். நான் தமிழக மற்றும் புதுச்சேரியில் பாஜக மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் அமித்ஷாவை டெல்லியில் போய் சந்திப்பது சகஜம் தான். ஒன்னு ஒன்னு ரெண்டு தான். அதை 11 ஆக்க‌ முடியாது. ஆக்க வேண்டாம். மீண்டும் NDA Alliance தான் ஜெயிக்கும்.. தவெகவில் 234 தொகுதிக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.