"விஜய் கட்சி தொடங்கியதால் அஜித்துக்கு விருதா?"- நடிகை குஷ்பு பதில்

 
ச்

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளான  சரத்குமார் மற்றும்  குஷ்பு ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இதில் மாநில துணைத்தலைவர்கள் மாநில செயலாளர்கள் மூத்த பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “நடிகை ஷோபனா, நடிகர் அஜித்க்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி, அந்த அங்கீகாரம் அவர்களுக்கு மிக முக்கியமானது. யாருக்கு விருது கொடுத்தால் நன்றாக இருக்கும் நியாயமாக இருக்கும் என்று எண்ணி சரியாக தேர்வு செய்து விருது கொடுக்கப்பட்டுள்ளது பெருமையாக இருக்கிறது. 

அரசியல் ரீதியாக பார்க்காமல் யாருக்கு விருது கொடுத்தால் நியாயமாக இருக்கும் என்று அதில் கொண்டு சரியாக தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அரிட்டாபட்டிக்கு முதல்வர் செல்வது காப்பி கேட் போன்று உள்ளது. மத்திய அரசு செய்வதை அப்படியாக அச்சடித்தது போல் காப்பி அடிக்கிறார்கள். அரிட்டாபட்டிக்கு செல்வதில் முதல்வருக்கு சின்ன சந்தோஷம் கிடைக்கிறது செய்துவிட்டு போகட்டும்” என்றார்