தமிழக பாஜக துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

 
kushboo kushboo

தமிழக பாஜகவின் துணை தலைவராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் கட்டாயம் பேச வேண்டும்  -  குஷ்பு.. 



தமிழக பாஜகவின் துணை தலைவராக நடிகை குஷ்பு, கே.பி. ராமலிங்கம், சசிகலா புஷ்பா உள்ளிட்ட 14 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் பட்டியலின்படி, எஸ்.ஜி.சூர்யா இளைஞரணி தலைவராகவும், எஸ்.ஆர்.சேகர் பொருளாளராகவும், கே.டி.ராகவன்  இணை அமைப்பாளராகவும், நாராயணன் திருப்பதி தலைமை செய்தி தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் முருகானந்தம் பொதுச்செயலாளராகவும், கராத்தே தியாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி, அஸ்வத்தாமன் உள்ளிட்ட 15 பேர் மாநில செயலாளரகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு கட்சியில் பதவி வழங்கப்படும் என கூறி வந்த விஜயதரணிக்கு இம்முறையும் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை.