அடுத்த வருஷமும் குறுவை சாகுபடி நடக்காது! வெதர்மேன் சொன்ன ஷாக்கிங் ரிப்போர்ட்..!!

 
Q

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது x பக்கத்தில், "எல் நினோ காலகட்டங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மிக கடுமையாக பாதிக்கப்படும். இதுதான் பேட்டன். இது இந்த ஆண்டும் தொடர்கிறது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 2 எல் நினோ ஆண்டுகளை விட இந்த ஆண்டு நிலைமை மோசமாகியிருக்கிறது என்பதுதான்.

காவிரி ஆற்றின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்கும் இப்பகுதியில், எல் நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு ஒவ்வொரு ஆண்டும் சரிந்து வருகிறது.

2015ல் இயல்பான மழையை விட 8% அளவுக்கு மழை குறைந்தது.

2023ல் நிலைமை மோசமடைந்து 28% அளவுக்கு மழை குறைந்தது

2023ல் இது 36% என்கிற அளவுக்கு குறைந்துள்ளது.

காவிரியின் உபநதிகளுக்கு நீர் வழங்கும் முக்கிய பகுதியான கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை கடுமையாக குறைந்திருக்கிறது.

2015ல் இயல்பான மழையைவிட 26% அளவுக்கு மழை குறைந்தது

2023ல் மிக மோசமாக 34% வரை மழை குறைந்தது

2026ல் இந்த ஆண்டும் 28% வரை மழை குறைந்தது

தமிழகத்தின் முக்கிய நீர்ப்பிடிப்பு மாவட்டமான நீலகிரியிலும் 32% அளவுக்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இப்படி எல்லா இடங்களிலும் மழை பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் அதன் தாக்கம் 2027ம் ஆண்டும் எதிரொலிக்கும். குறிப்பாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில்.. கோடைக்காலத்தில் பாதிப்பு தீவிரமாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

காவிரி படுகை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக சரிந்து, கோடையில் குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடையலாம். மேட்டூர் அணை மற்றும் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் போன்ற முக்கிய அணைகளில் நீர் இருப்பு மிக குறைவாக இருப்பதால்.. குறுவை, சம்பா போன்ற விவசாய சாகுபடிகள் மற்றும் பயிர் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படும்.

கேரளாவின் இடுக்கி, வயநாடு போன்ற பகுதிகளில் மழை குறைந்திருப்பதால் நீர்மின் உற்பத்தி சரிவடைந்து மின்சார விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.