புதுயுகம் டிவியில் நவ.1 முதல் ‘குறளுக்கும் அமுதென்று பேர்’

 
s

‘புதுயுகம்’ தொலைக்காட்சியில், வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஸ்ரீராம் சிட்ஸ் வழங்கும் ‘குறளுக்கும் அமுதென்று பேர்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ் ஆர்வம் உள்ள பள்ளி-கல்லூரி மாணவர்களுக்காக - திருக்குறள் சார்ந்த மாபெரும் அறிவார்ந்த நிகழ்ச்சியாக இது மலரவிருக்கிறது. 

s

இந்நிகழ்ச்சியை, ஸ்ரீராம் குழுமம் தயாரிக்க, நிஸ் கிரியேட்டிவ்ஸ் (nis creativezz) சார்பாக திரு. G. செல்வா இயக்க, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு. இராம்குமார் சிங்காரம் தொகுத்து வழங்கவுள்ளார். 2026 நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஜனவரி 24, 2027 வரை 13 ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9:30 மணி முதல் 10 மணி வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.  ஸ்ரீராம் குழுமம், சென்னை, வேலூர், தாம்பரம், புதுச்சேரி, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, தஞ்சாவூர், திருவாரூர், கோவை மற்றும் ஈரோடு  ஆகிய 12 மையங்களில் திறமைமிக்க மாணவர்களைக் கண்டறியும் முதல்கட்டப் பேச்சுப் போட்டியினை நடத்தியது. திருக்குறளை மையமாகக் கொண்ட இந்தப் போட்டியில் மொத்தம் 5620 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். பின், இறுதிச் சுற்று, பிரமாண்டமான முறையில் சென்னையில் நடத்தப்பட்டது. மொழி ஆர்வத்தையும், பேச்சாற்றலையும் ஒருசேர வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள்!