வெள்ளியங்கிரி மலையில் வலம் வரும் ஒற்றை காட்டு யானை - கும்கி யானை வரவழைப்பு!
கோவை வெள்ளியங்கிரி கோயில் பகுதியில் சுற்றிவரும் ஒற்றைக் காட்டு யானையை, காட்டுக்குள் விரட்ட கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
கோவை வெள்ளியங்கிரி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலை பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், வெள்ளியங்கிரி கோயில் பகுதியில் சுற்றிவரும் ஒற்றைக் காட்டு யானையை, காட்டுக்குள் விரட்ட கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாப்சிலிப் முகாமில் இருந்து நரசிம்மன் என்ற கும்கி யானையை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர். நாளை மேலும் ஒரு கும்கி யானை அழைத்து வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


