குமரி: திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்

 
tn

தக்கலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரமேஷ்பாபுவை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட — அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

tn

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், தக்கலை தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் எம்.ஆர். ரமேஷ்பாபு. கழகக் கட்டுப்பாட்டை மீறியும். கழகத் திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல் பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப் படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

suspend

 திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  நாம் தமிழர் கட்சி நிர்வாகி சேவியர்குமார் கொலை வழக்கில் ரமேஷ்பாபு உட்பட 15 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.