குவியும் பாராட்டுக்கள்..! உலக நாடுகளை அசர வைத்த இஸ்ரோ..!

 
1

விண்ணில் பாயும் ராக்கெட்டுகள் பணி முடிந்ததும் பூமிக்குத் திரும்பும் வகையில் தயாரிக்கப்பட்டது புஷ்பக் ராக்கெட்.

இந்தியாவில் ஒவ்வொரு முறை விண்வெளிக்கு செல்லும் போதும் ஒவ்வொரு ராக்கெட்டை தனியாக தயாரித்து அதை விண்வெளிக்கு அனுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. இந்நிலையில் இஸ்ரோ இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை தயாரிக்க முடிவு செய்தது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இது போன்ற ராக்கெட்டுகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் இஸ்ரோவும் இது போன்ற ராக்கெட்டை செய்வதற்காக பணியை துவங்கியது. இந்த ராக்கெடிற்கு புஷ்பக் என்ற பெயரும் வைத்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் லேண்டிங் செய்து சோதனை செய்த நிலையில் நேற்று  அதிகாலை மீண்டும் இரண்டாம் கட்ட சோதனையை செய்துள்ளனர்.இந்த புஷ்பக் ராக்கெட் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் பூமியிலிருந்து சுமார் 4.2 கிலோமீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. திட்டமிட்டபடி இந்த ராக்கெட் குறிப்பிட்ட பொசிஷனில் இருந்து கீழே வீசப்பட்டது. அதன் பின்னர் இந்த ராக்கெட்டை ஆக்டிவேட் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் இதை பத்திரமாக அவர்கள் திட்டமிட்ட இடத்தில் லேண்ட் செய்ய முயற்சி செய்தனர். முதல் சோதனையிலும் இது போலவே சோதனை செய்யப்பட்டாலும் அப்பொழுது சரியான பொசிஷனில் கீழே வீசப்பட்ட ராக்கெட் எந்தவித பொசிஷன் மாறுதலும் இல்லாமல் லேண்டிங் பணியை மட்டும் செய்தது. ஆனால் இந்த முறை வேறு பொசிஷனுக்கு ராக்கெட்டை மாற்றி வீசப்பட்டது. ராக்கெட் தன்னைத்தானே மீண்டும் சரியான பொசிஷனிற்க்கு மாற்றிக்கொண்டு லேண்ட் செய்கிறதா என்பதை சோதனை செய்தனர். இந்த சோதனை வெற்றிகரமாக தற்போது முடிந்துள்ளது.

இதன்மூலம் இந்தியா மிகக் குறைந்த விலையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
 

இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், "புஷ்பக் ஏவுகலம் விண்வெளிக்கு மிகவும் மலிவான அணுகலை உருவாக்குவதற்கான இந்தியாவின் தைரியமான முயற்சி" என்று கூறினார். "இது இந்தியாவின் எதிர்கால மறுபயன்பாட்டு ஏவுதல் வாகனமாகும், அங்கு மிகவும் விலையுயர்ந்த பகுதியான மேல் கட்டம், அனைத்து விலையுயர்ந்த மின்னணு பொருட்களையும் கொண்டுள்ளது.

அதை பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதன் மூலம் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக மாற்றப்படுகிறது. பின்னர், சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்புவது அல்லது சுற்றுப்பாதையில் இருந்து செயற்கைக்கோள்களை மீட்டெடுப்பது போன்றவற்றை கூட இது செய்ய முடியும். இந்தியா விண்வெளி குப்பைகளைக் குறைக்க முயல்கிறது, புஷ்பக் அதற்கான ஒரு படியாகும் என கூறினார்