குவியும் பாராட்டுக்கள்..! ஐடி ஊழியர்களுக்கு உதவிய அன்புமணி ராமதாஸ்..!

 
1

ஐடி ஊழியர்கள் தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறார்கள். அதுவே வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய இடங்களை ஆராய தங்கள் வார இறுதி நாட்களைப் பயன்படுத்துகின்றனர்.. அதாவது நண்பர்களுடன் வெளியே சுற்றுவது, தொலைதூர பயணம் செய்வது என தங்கள் விடுமுறையை கழிக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் நேற்று இ.சி.ஆர் சாலையை நோக்கி 15 ஐடி ஊழியர்கள் பயணித்து வந்த நிலையில், அதில் ஒரு வாகனம் மட்டும் சுமார் 8 அடி பள்ளம் இருக்கும் இடத்தில் அந்த சாலையின் கீழே இறங்கியது.

அவர்கள் மணி கணக்கில் முயற்சி செய்தும், வாகனத்தை மேலே கொண்டு வரவில்லை. அங்கிருந்த பலர் "நாம் டிராக்டர் ரோப் கொண்டு வந்து வாகனத்தை காலையில் மீட்கலாம்" என்று அறிவுரை கூறினர். 

அச்சமயம் அவ்வழியாக வந்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அங்கு கூட்டம் கூடியதை அறிந்து, உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி, அந்த ஐடி ஊழியர்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்க, அவர்களும் "அய்யா எங்கள் வாகனம் பள்ளத்தில் சிக்கிக்கொண்டது இந்நேரத்தில் இவ்வழியாக வந்தது எங்கள் தவறுதான்" என்று கூறியதும், தலைவர் உடனடியாக தனது உதவியாளர்களை அனுப்பி உதவி செய்ய கூறினார். 

அனைவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் களத்தில் இறங்கி வாகனம் சாய்ந்திருந்த பக்கத்தில் அன்புமணி அவர்களின் 4 உதவியாளர்களும் வாகனத்தை தாங்கிப் பிடிக்க அன்புமணி அவர்களின் ஓட்டுநர் ஐடி ஊழியர்களின் வாகனத்தில் அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக வாகனத்தை  நகர்த்தி, சாமர்த்தியமாக மீட்டு சாலையின் மீது கொண்டு வந்ததார்.

இந்த அற்புதமான செயல் அங்கிருந்த ஐடி ஊழியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. அந்த 15 நபர்களும் சின்னய்யா அவர்களிடம் வந்து நெகிழ்ச்சியோடு நன்றி கூறி மகிழ்ந்தனர்.