குவியும் பாராட்டுக்கள்..!! அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த த.வெ.க. எம்.எல்.ஏ..!!
Jun 11, 2026, 11:27 IST1781157459808
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தனி தொகுதியில், இம்முறை த.வெ.க.,வை சேர்ந்த இளங்கோவன் வெற்றி பெற்றார்.
திருப்புவனம் அருகே, அகரம் கிராமத்தை சேர்ந்த இவருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவியும் தேவமித்ரா என்ற மகளும் உள்ளனர். தேவமித்ரா , அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.
திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று எம்.எல்.ஏ., இளங்கோவன், மனைவியுடன் சென்று, மகளை ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார்.
தலைமை ஆசிரியை இந்திராவிடம், பள்ளிக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

