ராகுல் மீது கை வைத்த போலீஸ்! டெல்லியில் பரபரப்பு

 
rahul

டெல்லியில் 8 மணி நேரத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Rahul Gandhi, Priyanka detained during protest in Delhi

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் 9 மணி நேரத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். தர்ணா போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் அப்புறப்படுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டெல்லி ஆகாஷ்வாணி அலுவலகம் முன்பு அமர்ந்து காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்தது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர்  காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.