ராமர் கோவில் திறக்கப்பட்டதால் இந்தியாவில் எந்த ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை: கே.எஸ்.அழகிரி

 
கே எஸ் அழகிரி

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதனால் இந்தியாவில் எந்த ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

ks alagiri

திருப்பனந்தாள் அருகே தத்துவாஞ்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதனால் எந்த மாற்றமும் இந்தியாவில் நிகழப் போவதில்லை. ஏற்கனவே பல ராமர் கோயில்கள் அயோத்தில் உள்ளன. மோடி திறந்துள்ளது அதில் ஒரு கோவில். இதனால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. கோவில் முழுவதும் கட்டி முடிக்கப்படாமல் குடமுழுக்கு நடத்தி இருப்பது ஆகம விதிகளுக்கு முரணானது என சங்கராச்சாரியார்கள் தெரிவிக்கின்றார்கள். பொதுவாக ராமர் கோயிலில் ராமர் சீதை, ராமர் பட்டாபிஷேகம் போன்ற காட்சிகள் தான் இடம்பெறும், இங்கு அயோத்தியில் நேற்று திறக்கப்பட்ட கோவிலில் குழந்தையின் சிலை உள்ளது. மோடி வேண்டியதற்காக அந்த சிலை திறக்கப்பட்டுள்ளது

நேற்று ராகுல்காந்தி அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு தரிசனத்திற்கு செல்ல முயன்ற போது அந்த மாநில அரசால் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கு பாஜக ஆட்சி நடக்கிறது. முறைப்படி அந்த அரசு மீது தீண்டாமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்தியாவில் ராமருக்கு புகழ் சேர்த்தது காந்தி தான், நேற்று ராகுல்காந்தி மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது” என்றார்.