மத்திய அரசை கண்டித்து வருகிற 15ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

 
ks alagiri

100 நாள் வேலை திட்டத்தை சின்னாபின்னமாக்கும் மத்திய அரசை கண்டித்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பு நவம்பர் 15ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைத்து, சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக வருகிற நவம்பர் 15 ஆம் தேதி காலை 11 மணியளவில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். 


100 நாள் வேலைத் திட்டம் என்பது வறுமையை ஒழிக்க காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்ததாகும். அதை மோடி ஆட்சி புறக்கணிப்பதை எடுத்துக் கூறும் வகையில் மக்களிடம் பரப்புரை மேற்கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தயாரித்த துண்டுப் பிரசுரத்தை கிராமப்புற மக்களிடையே விநியோகிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.