அதிமுகவிற்குள் நடக்கும் பிரச்சனைக்கு பாஜகவே காரணம்- கே.எஸ் அழகிரி

 
ks

தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. அவர்களுக்குள் உள்ள பிரச்சனைக்கு காரணமே பஜக தான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

Decision of SC is like turning back the wheel of existence: Tamil Nadu  Congress Committee chief K S Alagiri | Chennai News - Times of India

அரியலூர் பேருந்து நிலையம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை திறந்து வைத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஸ்டாலின் பொறுமையாக நிதானமாக சிந்தித்து சட்டத்துக்கு புறம்பாக இல்லாமல் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறார். எடுத்தேன் கவிழ்தேன் என்று இல்லாமல் ஒருவர் மீது வழக்கு தொடர்ந்து சிறையில் அடைப்பது என்றில்லாமல் தீர விசாரித்து செயல்படுவது தான் சரி என்று செயல்படுகிறார். 

தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. அவர்களுக்குள் உள்ள பிரச்சனைக்கு காரணமே பஜக தான் ஏற்கனவே ஓபிஎஸ் துணை முதல்வர் பதவியை ஒப்புக் கொண்டதற்கு காரணமே பிரதமர் கூறியதால்தான் என அவரே கூறியுள்ளார். இப்பொழுதும் அவர் பிரதமரை சந்திக்கச் செல்கிறார். அதேபோல் பழனிச்சாமியும் பிரதமருடன் தொடர்பில் உள்ளார். ஓபிஎஸ்,பழனிச்சாமி, சசிகலா ஆகிய மூன்று பேரையுமே பாஜக பொம்மையாக கையால்கிறது. இந்தியா முழுவதுமே தனது கூட்டணி கட்சிகளை பாஜக அப்படிதான் சிதைக்கிறார்கள், சிவசேனா அழித்தது போல் அதிமுகவை பாஜக அழிக்கிறது” எனக் கூறினார்.