"கள்ளச்சாராய விவகாரம்- திருமாவை தவிர வேறு யாருமே இதை சொல்லல"- கே.எஸ்.அழகிரி

 
ks alagiri

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் மறைந்த தென்னாட்டு அம்பேத்கார் என கூறப்படும் இளையபெருமாள் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் கே .எஸ் அழகிரி கலந்து கொண்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ks alagiri

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ் அழகிரி, “இளையபெருமாள் விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர் மக்களுக்காக போராடியவர். கள்ளசாரய விஷயத்தில் பாஜக, அதிமுக அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். அதற்காகவே பாஜக , அதிமுக நடத்தும் போராட்டங்கள் நடத்துகின்றன. இந்தியாவிலேயே 40க்கு 40 என அதிக வெற்றியை கண்ட முதலமைச்சர் ஸ்டாலினை இதனால் வீழ்த்த முடியுமா ? இதிலிருந்து பாஜக, அதிமுகவின் சுயரூபம் தெரிந்து விட்டது.

கள்ளச் சாராய விஷயத்தை பிரதானமாக பேசிய எதிர்க்கட்சிகள், அவர்களுடைய ஆட்கள் தான் சாராயத்தை அங்கு காய்ச்சி விற்று இருக்கிறார்கள். பாமக, அதிமுகவும் வாய்க்கு வந்ததெல்லாம் பேசி வருகின்றனர். அதிமுக ஒன்றும் மதுவிலக்கு வேண்டும், டாஸ்மாக் தேவை இல்லை, முற்றிலும் மதுவை ஒழிக்க வேண்டும் என கூறவில்லை. எந்த கட்சிக்கும் மதுவிலக்கை பற்றி தெளிவான விளக்கம் இல்லை. எப்படி ஒழிக்க வேண்டும் என்றும் மதுவில்லா தமிழகம் வேண்டும் என்றும் திருமாவளவனை தவிர வேறு யாரும் தெரிவிக்கவில்லை. கள்ளச்சாராய விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார்” என்றார்.