அடுத்த ஆண்டு மலரப்போகும் நல்லாட்சிக்கான கொண்டாட்டமாக இந்த தீபாவளி அமையட்டும்: கே.எஸ்.அழகிரி

 
ks alagiri

தமிழ்நாடு காங்கிரஸ்‌ கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

Comparing the BJP with the Congress? KS Alagiri condemns Annamalai |  காங்கிரஸ் கட்சியோடு பா.ஜ.க.வை ஒப்பிடுவதா? அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீமையின்‌ மீது நன்மையும்‌, இருளின்‌ மீது ஒளியும்‌ வெற்றி பெற்றதைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ திபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்‌, ராவணனை வென்று 14 வருட வனவாசத்திற்குப்‌ பிறகு ஸ்ரீராமர்‌ அயோத்திக்குத்‌ திரும்பினார்‌. அயோத்தியின்‌ குடிமக்கள்‌ தங்கள்‌ வீடுகளையும்‌ முழு நகரத்தையும்‌ விளக்குகளால்‌ அலங்கரித்தனர்‌. இது தான்‌ தீபாவளி என்ற கதை வட இந்தியாவில்‌ உள்ளது.  அதேபோல்‌, மோடி ஆட்சியில்‌ 10 ஆண்டு காலம்‌ மக்கள்‌ பட்ட இன்னல்கள்‌ முடிவுக்கு. வர இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நாடே இருக்கும்‌ நிலையில்‌, இந்த தீபாவளி சிறப்பு வாய்ந்ததாகும்‌. நாடு முழுவதும்‌ இந்த நம்பிக்கை பரவிக்கிடப்பது மக்களின்‌ எழுச்சியைப்‌ பார்க்கும்‌ போது தெரிகிறது. 

அடுத்த ஆண்டு மலரப்போகும்‌ நல்லாட்சிக்கான கொண்டாட்டமாக இந்த தீபாவளி அமையட்டும்‌.  பாதுகாப்பான தீபாவளியைக்‌ கொண்டாடுங்கள்‌. வழக்கம்போல்‌ மற்ற மதத்தவரோடு வாழ்த்துகளையும்‌ இனிப்புகளையும்‌ பகிர்ந்து கொள்‌வோம்‌. வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில்‌ இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின்‌ அடையாளமாகக்‌ கொள்வோம்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.