விஜயெல்லாம் எந்தக் காலத்திலும் பிரதமருக்கு போட்டியிட முடியாது - கிருஷ்ணசாமி
Aug 30, 2026, 19:37 IST1788098879202
பிரதமர், சர்வதேச தலைவர்.. இதெல்லாம் தவறான ஆசை.. அகலக் கால் வைத்தால் அதுவே விஜய்க்கு பெரிய ஆபத்தா முடிய வாய்ப்பிருக்கு என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, “பிரதமர், சர்வதேச தலைவர்.. இதெல்லாம் தவறான ஆசை.. அகலக் கால் வைத்தால் அதுவே விஜய்க்கு பெரிய ஆபத்தா முடிய வாய்ப்பிருக்கு. விஜயெல்லாம் எந்தக் காலத்திலும் பிரதமருக்கு போட்டியிட முடியாது. 30 ஆண்டுகளாக எனக்கு கொடுக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தவெக ஆட்சி வந்ததும் வழங்கவில்லை. ஜஸ்முதல்வர் விஜயை பிரதமர் என தவெகவும், ராகுல் காந்தி பிரதமர் என காங்கிரஸும் சொல்கிறது. தவெக கூட்டணி முரண்பட்ட கூட்டணியாக உள்ளது. 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்த விஜய் முயல வேண்டும். தேசிய தலைவர் என்பதெல்லாம் பிறகு ஆகட்டும்” என்றார்.

